Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்: தமிழிசைக்கு ஸ்டாலின் நறுக் பதிலடி

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (18:43 IST)
தண்ணீர் இல்லாத தமிழகத்தில் புல்லே முளைக்காது இதில் தாமரை எங்கே மலரும் என ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். 
 
இதற்கு தமிழிசை, இனி மழைக்காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும். குளம் நிறையும். தாமரை மலரும். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலர செய்வோம் என பதில் அளித்தார். 
 
தற்போது தமிழிசையின் டிவிட்டிற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஸ்டாலின். அதாவது, சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
ஸ்டாலினுக்கும் தமிழிசைக்கும் பிரச்சனை ஆரம்பித்தது என்னவோ மேகதாது விஷயமாகதான். ஆனால் அது இப்போது மழை, தாமரை, சூரியன் என்று திசை மாறி போய்க்கொண்டிருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

ஒரு இந்து கூட பயங்கரவாதியாக இருக்க மாட்டார்கள்: பெருமையுடன் சொன்ன அமித்ஷா

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

அடுத்த கட்டுரையில்
Show comments