டெங்குவை தடுக்கும் ஸ்டாலின்.. பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம்

Arun Prasath
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (14:23 IST)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கி தானும் குடித்தார் திமுக தலைவர் முக ஸ்டாலின்

டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் டெங்குவை தடுக்க சுகாதாரத் துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மட்டுமின்றி உடன் வரும் உறவினர்களுக்கும் நிலவேம்பு கசாயம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதனை திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் பொது மக்களுக்கு வழங்கினார்.

பின்பு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கிய அவர், தானும் கசாயத்தை பருகினார். மேலும்” டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த தமிழக அரசு உரிய முயற்சி எடுக்க வேண்டும், திமுக சார்பாக நிலவேம்பு கசாயம் அளிக்க உத்தரவிட்டுள்ளேன்” எனவும் முக ஸ்டாலின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments