Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷூ காலுடன் கும்ப மரியாதையை ஏற்ற ஸ்டாலின்: மீண்டும் சர்ச்சை

ஷூ காலுடன் கும்ப மரியாதையை ஏற்ற ஸ்டாலின்: மீண்டும் சர்ச்சை
, செவ்வாய், 13 அக்டோபர் 2015 (16:10 IST)
கோவையில் நாமக்கு நாமே சுற்று பயணத்தில் குஜராத் சமாத் சங்கத்திற்கு வருகை தந்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் அங்கு கொடுக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை ஷூ காலுடன் ஏற்றுக்கொண்ட புகைப்படம் வலைதளங்களில் வைரலாக பரவி அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ’நமக்கு நாமே’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளர். இந்த சுற்றுப் பயணத்தில்அவ்வபோது சர்ச்சையில் சிக்கி வரும் மு.க.ஸ்டாலின் கூடலூரில் தன்னுடன் செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற ஒரு ஆட்டோ ஓட்டுனரை தாக்கியதாக சர்ச்சை ஏற்பட்டது.



பின்னர் அந்த ஆட்டோ ஓட்டுனரை அழைத்து ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், தான் அவரை அடிக்கவில்லை, கிராபிக்ஸ் செய்யப்பட்டு தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது என்ற விளக்கத்தையும் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த 9-ம் தேதி நமக்கு நாமே பயணத்தை கோவையில் தொடர்ந்த ஸ்டாலின், வடகோவை குஜராத் சமாத் சங்கத்திற்கு வருகை தந்தபோது சங்கத்தின் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பூரண கும்பத்தை ஷூவை கழட்டாமல் தொட்டு வணங்கிய அவர் ஷூ காலுடன் கும்பத்தை வணங்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil