Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடிவி தினகரனின் மாஸ்டர் தான் ஸ்டாலின்: ஜெயகுமார் குற்றச்சாட்டு

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (12:52 IST)
டிடிவி தினகரனும் திமுகவும் மறைமுகமாக இணைந்து செயல்பட்டு வருவதாக கடந்த சில நாட்களாக அதிமுக தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை அவ்வப்போது தினகரனும் மறுத்து வருகிறார். இந்த நிலையில் டிடிவி தினகரனின் மாஸ்டரே திமுக செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் தான் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் இதுகுறித்து மேலும் கூறியதாவது: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களை சபரிமலையின் 18 படிகள் என்று கூறியுள்ளார் தினகரன். இவரென்ன சபரிமலை சாமியா? புலிப்பால் குடித்துவிட்டு வந்த சபரிமலை அய்யப்பன் இல்லை இவர், மனப்பால் குடித்து கொண்டிருக்கும் தினகரன்.
 
காவிரி பிரச்சனை குறித்து தினகரன் பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. அதேபோல் சட்டமன்றத்தில் பேசும்போது எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு தனது உரையில் மரியாதை செலுத்தியதும் கிடையாது. திமுகவின் குரலை மட்டுமே தினகரன் பிரதிபலித்து வருகிறார். இவருடைய மாஸ்டர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments