Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி வழங்கிய ஸ்டாலின்

Webdunia
வியாழன், 8 பிப்ரவரி 2018 (08:45 IST)
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைய இருக்கும் தமிழ் இருக்கைக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகம் 382 ஆண்டுகள் பழமையானது. சில உலகத் தலைவர்களையும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலரையும் பெற்றுத்தந்த  பெருமைமிக்கது. 382 ஆண்டுகள் பழைமையான ஒரு பல்கலைக் கழகத்தில்  3000 ஆண்டுகள் மூத்த மொழியான தமிழ் அமரப்போவது அந்தப் பல்கலைக் கழகத்திற்குத்தான் பெருமை.
 
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் செம்மொழியான தமிழுக்கு தனி இருக்கை அமைப்பதற்கு ரூ.40 கோடி தேவைபட்டது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
 
இந்நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ் இருக்கைக்காக ரூ.1 கோடி நிதி உதவி வழங்குவதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். அதன்படி, ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் மு.ஆறுமுகத்திடம் ரூ.1 கோடிக்கான காசோலையை மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments