Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு!

Webdunia
திங்கள், 23 மே 2016 (10:32 IST)
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் திமுக சார்பில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து கொள்கிறார்.


 
 
தமிழகத்தில், நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 134 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கிறது. இதனையடுத்து, இன்று தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க உள்ளார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இந்த விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
 
இந்த விழாவில் கலந்து கொள்ள, அதிமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் தமிழக சட்டசபையின் முதல் வலிமையான பிரதான எதிர்க்கட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ள திமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
 
அதிமுகவின் இந்த அழைப்பை ஏற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளார். அவருடன் அவரது கட்சி சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 88 எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொள்கிறார்கள்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதுகாப்பு படையினரின் என்கவுண்டர்.. 31 நக்சல்கள் பலி.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

PM SHRI திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை: முதல்வர் ஸ்டாலின்

டெல்லியை அடுத்து மேற்கு வங்கத்திலும் பாஜக அரசு.. சுவேந்து அதிகாரி நம்பிக்கை..!

டெல்லி முதல்வர் அதிஷி ராஜினாமா.. புதிய ஆட்சி பதவியேற்பது எப்போது?

உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும்.. திமுக அரசை சரமாரியாக விமர்சனம் செய்த அண்ணாமலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments