Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செய்தியாளரை சிறைப்பிடித்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிர்வாகம்

செய்தியாளரை சிறைப்பிடித்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிர்வாகம்
, புதன், 7 செப்டம்பர் 2016 (03:49 IST)
எஸ்.ஆர்.எம். ஆக்கிரமிப்பு கட்டடம் இடிக்கப்பட்டது குறித்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளரை கல்லூரி நிர்வாகம் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 

 
தலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து, எஸ்.ஆர்.எம். நிறுவனம் கட்டியிருந்த டிராவல்ஸ் முன்பதிவு மையம், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இரவோடு இரவாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
 
இதனிடையே எஸ்.ஆர்.எம். ஆக்கிரமிப்பு கட்டடம் இடிக்கப்பட்டது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ‘ஜூனியர் விகடன்’ வார இதழின் செய்தியாளர் ஜெயவேல் என்பவரை கல்லூரி நிர்வாகம் சிறைப்பிடித்தது.
 
மேலும், அவரிடமிருந்த செல்போன், கேமரா, மோட்டார் பைக் ஆகியவற்றை பறித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பத்திரிகையாளர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், சுமார் 2 மணிநேரத்திற்கு பிறகே ஜூ.வி. செய்தியாளர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரவோடு இரவாக எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ் கட்டிடம் இடிப்பு - ஆக்கிரமிப்பு புகாரால் நடவடிக்கை