Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மையும் நீதியும் வெல்லும்: மனைவி பிரமிளாவின் குற்றச்சாட்டுக்கு ஸ்ரீதர் வேம்பு பதில்...!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (19:20 IST)
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமிலா குற்றம் சாட்டிய நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஸ்ரீதர் வேம்பு பதில் அளித்துள்ளார். 
 
என்னையும் ஆட்டிசம் பாதித்த எனது மகனையும் கைவிட்டுவிட்டு எங்களுக்கு பொதுவாக இருந்த சொத்துக்களை வேறு சிலருக்கு மாற்றிவிட்டார் என ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமிளா குற்றம் காட்டி இருந்தார்
 
இந்த  குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு என் மனைவி என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் என்றும் நான் என் மனைவி மகனை நிதி தொடர்பாக ஏமாற்றவில்லை என்றும் எப்போதும் அவர்களை ஆதரித்தே வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். 
 
கடந்த மூன்று ஆண்டுகளாக என்னுடைய அமெரிக்க சம்பளம் என் வீடு எல்லாமே அவரிடம் தான் உள்ளது என்றும் அவர் நடத்தி வரும் அமைப்பு இப்போதும் ஜோஹோவின் ஆதரவில் தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் 
 
நான் வாழும் நாட்கள் வரை அவை தொடரும் என்றும் இந்த குழப்பம் யாவும் குடும்ப பகை காரணமாக என் சித்தப்பாவால் ஏற்படுத்துகிறது என்றும் உண்மையையும் நீதியும் வெல்லும் என இப்போதும் நான் நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments