Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற பாமக தயார்: அன்புமணி ராமதாஸ்

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (13:30 IST)
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றால், பாஜக கூட்டணியை விட்டு வெளியேற பாமக தயாராக இருக்கிறது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அன்புமணி அளித்த பதில்கள் வருமாறு:-
 
கேள்வி:- இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தனி ஈழம்தான் ஒரே தீர்வு என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளாரே?
 
பதில்:- இலங்கை தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்.
 
கேள்வி:- அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் கூடும் முன்பே நீங்கள் வலியுறுத்தினீர்கள். ஆனால் கூட்டப்படவில்லை. ஏன் நீங்களே அந்த கூட்டத்தை கூட்டினால் என்ன?
 
பதில்:- அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட நான்தயார். ஆனால், அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டுமே.
 
கேள்வி:- ஈழத்தமிழர் பிரச்சினையில் உண்மையாக குரல் கொடுப்பதாக இருந்தால், பாஜக கூட்டணியை விட்டு பாமக வெளியே வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளாரே?
 
பதில்:- இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றால், பாஜக கூட்டணியை விட்டு வெளியேற பாமக தயாராக இருக்கிறது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments