Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் வேடம் கலைந்து விட்டது - தா.பாண்டியன்

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2014 (10:38 IST)
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பாஜக வேடம் கலைந்து விட்டது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
 
ஈரோட்டில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கலந்து கொண்டார்.
 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
“இலங்கை ராஜபக்சே அரசு இன ஒழிப்பு கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. ஏற்கனவே இருந்த காங்கிரஸ் அரசு இலங்கை நட்பு நாடு, எனவே அங்கு நடக்கும் உள்நாட்டு போரில் தலையிட முடியாது என்று கூறியது.
 
இதனையே இப்போது பதவியில் இருக்கும் பாஜக அரசும் சொல்கிறது. உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஐ.நா. சபை மூலம் இலங்கையில் நடைபெற்ற இன ஒழிப்பு பற்றி விசாரணை நடத்த முயற்சி மேற்கொண்டும் இலங்கை அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
 
தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்கி வருகிறது. இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் ஆசிய அரசியல் தலைவர்கள் மாநாட்டில் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் பங்கேற்றுள்ளார்.
 
இதனை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த மாநாட்டில் பாஜக அரசின் பிரஜைகள் பங்கேற்றதன் மூலம் இலங்கை விவகாரத்தில் பாஜக வின் வேடம் கலைந்து விட்டது.“ இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments