Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசியை தவறவிட்ட குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 26 டிசம்பர் 2024 (10:39 IST)
குழந்தைகளுக்கு சில தடுப்பூசிகளை தவறாமல் செலுத்த வேண்டும் என்ற நிலையில், தடுப்பூசிகளை தவறவிட்ட குழந்தைகளுக்காக சிறப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்ட குழந்தைகளுக்காக டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மொத்தம் 11 வகை தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், அவற்றில் காச நோய், கல்லீரல் புற்றுநோய், இளம்பிள்ளை வாதம், கக்குவான், இருமல், நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை, மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 11 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உரிய நேரத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தாத பெற்றோர், இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி எந்த தடுப்பூசியை செலுத்தவில்லையோ, அந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்திக் கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அவர்கள் கூறியுள்ளார்.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

+8, +85, +65 தொடங்கும் எண்களில் இருந்து அழைப்பு வருகிறதா? மத்திய அரசு எச்சரிக்கை

வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! இனி மழை எப்படி இருக்கும்? - இந்திய வானிலை ஆய்வு மையம்!

அமெரிக்காவின் தேசியப்பறவை கழுகு: அதிகாரபூா்வமாக அறிவித்த ஜோ பைடன்.. டிரம்ப் மாற்றுவாரா?

நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் எப்படி?

ஆப்கானிஸ்தான் மீது குண்டுமழை பொழிந்த பாகிஸ்தான்! போர் உருவாகும் சூழல்?

அடுத்த கட்டுரையில்
Show comments