மகா கும்பமேளா.. கன்னியாகுமரியில் இருந்து கயாவுக்கு சிறப்பு ரயில்.. சென்னை வழியாக இயக்கம்..! | Kumbamela Special Train

Siva
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (08:21 IST)
உத்தரபிரதேசத்தில் நடக்க இருக்கும் கும்பமேளா விழாவை முன்னிட்டு  கன்னியாகுமரியில் இருந்து சென்னை வழியாக கயாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து வருகிற 6-ந் தேதி மற்றும் 20-ந் தேதிகளில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.10 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்றடைகிறது. நள்ளிரவு 1.30 மணிக்கு கயா சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரயில் கயாவில் இருந்து வருகிற 9-ந் தேதி மற்றும் 23-ந் தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4 மணிக்கு சென்னை வந்தடைகிறது. இரவு 11.30 மணிக்கு மதுரை வந்தடைகிறது. நள்ளிரவு 3.50 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.

அதேபோல, கன்னியாகுமரியில் இருந்து மதுரை, சென்னை வழியாக பனாரசுக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் கன்னியாகுமரியில் இருந்து வருகிற பிப்ரவரி மாதம் 17-ந் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.10 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்றடைகிறது. இரவு 9.50 மணிக்கு பனாரஸ் ரயில் நிலையம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் இந்த ரயில் பனாரசில் இருந்து வருகிற பிப்ரவரி மாதம் 20-ந் தேதி மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.50 மணிக்கு சென்னை ரயில் நிலையமும், மாலை 3.15 மணிக்கு மதுரை ரயில் நிலையமும் வந்தடைகிறது. இரவு 9 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையம் சென்றடைகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments