Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அதிமுக இப்படி செய்தது வருத்தம் அளிக்கிறது’ - தமிழிசை சவுந்தரராஜன் கவலை

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (05:05 IST)
பொருளாதாரத்தில் புரட்சியை உருவாக்கும் மிகப்பெரிய மசோதாவுக்கு ஆதரவளிக்காமல் அதிமுக வெளிநடப்பு செய்தது வருத்தம் அளிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 

 
விருகம்பாக்கத்தில் ஒலிம்பிக் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடத்தில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ”மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. மசோதா மிகப்பெரிய பொருளாதார புரட்சியை ஏற்படுத்தும்.
 
வாட்வரி, கொள்முதல் வரி, சேவை வரி, விற்பனை வரி, விளம்பர வரி, சுங்க வரி, மாநில வரி, சொகுசு வரி போன்ற அனைத்து வரிகளையும் ஒரே வரியாக்கி ஒரே நாடு ஒரே வரி என்பதை மோடி உருவாக்கி இருக்கிறார்.
 
பொருளாதாரத்தில் புரட்சியை உருவாக்கும் மிகப்பெரிய மசோதாவுக்கு ஆதரவளிக்காமல் அதிமுக வெளிநடப்பு செய்தது வருத்தம் அளிக்கிறது.
 
இந்த மசோதா மாநிலங்களை பாதிக்கும் என்ற கருத்து ஏற்புடையதல்ல. 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பெண் குழந்தைகள் மீது நடைபெறும் தாக்குதல்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது. தன்னை விரும்பாவிட்டால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது, எரித்து கொல்வது, திராவகம் வீசுவது போன்ற செயல்கள் தொடருகிறது. எனவே பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்