Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா அறிவாலயம் வருகிறார் சோனியா காந்தி! ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (20:36 IST)
திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் தாயாரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி வரும் நவம்பர் 15ஆம் தேதி வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா வரும் நவம்பர் 15ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் இந்த விழாவிற்கு தேசிய தலைவர்களை அழைக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி உள்பட பல தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் 15ஆம் தேதி சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெறும் என்றும் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.கருணாநிதியின் சிலையை திறக்க சோனியா காந்தி வருவது உறுதி செய்யப்பட்டால் திமுக-காங்கிரஸ் கூட்டணியும் உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குறைவான ஏடிஎம் மையங்கள்? பெருநகர் வளர்ச்சி குழுமம் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments