Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுக்கு காங்கிரஸ் அரண்: சிக்னல் கொடுத்த சோனியா?

அதிமுகவுக்கு காங்கிரஸ் அரண்: சிக்னல் கொடுத்த சோனியா?

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2016 (16:05 IST)
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 4 வாரங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். வெளியுலக தொடர்பில்லாமல் அதிமுக தலைமை இருப்பதால் அந்த கட்சியை உடைக்கவும், ஆட்சியை கலைக்கவும் பல்வேறு சதிகள் நடப்பதாக செய்திகள் வெளிவந்தன.


 
 
ஏற்கனவே எம்.ஜி.ஆர் இறந்த போது கட்சிக்கு வந்த அதே சோதனை தான் தற்போதும் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்த சறுக்கலை பயன்படுத்த சில கட்சிகள் முயல்வதால், அதிமுகவே சிதறும் அபாயத்தில் உள்ளதாகவும் கூறுகிறார்கள்.
 
இந்த இக்கட்டான சூழலில் தான் அதிமுகவை காக்கும் அரணாக காங்கிரஸ் இருப்பதாக பேசப்படுகிறது. இத்தனை நாட்களாக தமிழகத்தில் திமுகவுக்கு வளைந்து கொடுத்து போன காங்கிரஸ் தற்போது நெஞ்சை நிமிர்ந்து நிற்கிறது. அதிமுக பக்கம் சாய்வது போல் இருந்து அந்த கட்சிக்கு வரும் சில அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து காத்து வருகிறது.
 
தமிழகம் வந்து முதல்வரின் உடல் நிலை குறித்து விசாரித்த ராகுல் காந்தியும் சூசகமாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருப்போம் என கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் தான் திமுக உடன் உரசல் போக்கை கடைபிடித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.
 
இந்நிலையில் காங்கிரஸ் அகில இந்திய தலைவி சோனியா காந்தி தமிழக தலைவர் திருநாவுக்கரசரை தொடர்பு கொண்டு அதிமுக தான் சிறந்தது அவர்களுடன் இணக்கமாக செல்லுங்கள் என கூறியதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வருகின்றன. அதிமுகவுக்கு வரும் சோதனைகளை தகர்த்து அவர்களுக்கு துணையாக நாம் இருப்போம் என சோனிய கூறியதாக பேசப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments