Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயின் நகையை களவாடி நாடகமாடிய மகன் கைது

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2016 (19:34 IST)
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பைரோஜாபேகம்(60) என்பவர் நேற்று வெளியூர் சென்றிந்த போது,   அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த சுமார் 92 சவரன் தங்க நகைகளை கொள்ளையர்கள் அள்ளி சென்றனர்.



இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உத்திரவின் பேரில் அரவக்குறிச்சி டி.எஸ்.பி. கீதாஞ்சலி தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், உடுமலைபேட்டையில் வசிக்கும் பைரோஜாவின் மூத்தமகன் சையதுசலீம்(37) என்பவரே  92 சவரன் தங்க நகைகளை திருடியதாக தெரியவந்தது.

சையதுசலீமை அரவக்குறிச்சி போலீஸ் கைது செய்து  அவரிடமிருந்து ரூ 21 லட்சம் மதிப்பில்லான 92 சவரன் நகையை கைப்பற்றி காவல்துறையினர்  நீதிமன்றத்தில் அஜர்படுத்தி திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments