Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் பலியான தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகன்

Webdunia
சனி, 16 ஜூலை 2016 (00:30 IST)
பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மகனுடம் வந்த தந்தை விபத்தில் மரணமடைந்தார். அவரின் கடைசி ஆசையை மகன் நிறைவேற்றி உள்ளார்.


 
புதுக்கோட்டை மாவட்டம் வத்தனா குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திரன், சிவகங்கை சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவில் ஏட்டாக பணிபுரிந்துவந்தார். அவருடைய மகன் பிரதியுனன் (17), பிளஸ்-2 முடித்து பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து இருந்தார். அவர் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக தந்தையுடன் புதுக்கோட்டையில் இருந்து காரில் புறப்பட்டார். காரில் வந்தபோது, ”நன்றாக படித்து என்ஜினீயர் ஆகவேண்டும்” என்று ரவீந்திரன் மகனிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, உளுந்தூர்பேட்டை அருகே வந்த போது இவர்கள் கார் மீது ஒரு லாரி மோதியதில், முன் அமர்ந்திருந்த ஏட்டு ரவீந்திரன், பரிதாபமாக மரணமடைந்தார். பிரதியுனன், அவர் மாமா, சித்தப்பாவிற்கு லேசான காயம் ஏற்பட்டதில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டனர். கணவர் இறந்த செய்தி தெரிந்து கதறி அழுதபடி உளுந்தூர்பேட்டை வந்தார் ரவீந்திரனின் மனைவி ரேணுகா. தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற கலந்தாய்வுக்கு செல்லும்படி ரேணுகா கூறியதை அடுத்து, பிரதியுனன் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொண்டு தனியார் பொறியியல் கல்லூரியில் சிவில் பிரிவை தேர்ந்தெடுத்துள்ளார். பின்னர் அவர் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டு சென்றார். 

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments