Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி கொலையாளியை ஒருவர் துரத்திக்கொண்டு ஓடினார்!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (08:28 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ஆம் தேதி சுவாதி என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் போது அங்கிருந்தவர்கள் கொலையாளியை ஏன் தடுக்கவில்லை, துரத்தி பிடிக்கவில்லை, சுவாதிக்கு உதவவில்லை என பல சர்ச்சைகள் எழுந்தன.


 
 
கூட்ட நெரிசலான ஒரு ரயில் நிலையத்தில் ஒருவன் புகுந்து ஒரு இளம் பெண்ணை படுகொலை செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளான் என பலரும் கூறுகின்றனர். ஆனால் சம்பவம் நடந்த அன்று, அந்த நேரத்தில் என்ன நடந்தது, அங்கு எத்தனை பேர் இருந்தார்கள் என அப்போது அங்கிருந்த ஒருவர் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
 
தமிழ்ச்செல்வன், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரும் தினமும் சுவாதி செல்லும் அதே ரயிலில் தான் பயணம் செய்கிறார். சம்பவம் நடந்த அன்று, அப்போது டப் டப் என சத்தம் கேட்டது.
 
நான் 4-வது கம்பார்ட்மெண்ட்டில் ஏறுவேன். அந்தப் பெண் 5-வது கம்பார்ட்மெண்ட்டில் பெண்களுக்கான பெட்டியில் ஏற நின்றார். அப்போது சுவாதி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
 
அப்போது அங்கே 6, 7 பேர்தான் இருந்தார்கள். இரண்டு பெண்கள் அய்யோ, அய்யோ என கத்தினார்கள். கொலை செய்த அந்த வாலிபர் நடைமேடையில் வேகமாக சென்று கொண்டிருந்தார் அவரை ஒருவர் துரத்தினார்.
 
கண் இமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் அதை தடுக்க முடியவில்லை. கொலையாளி வேகமாக நடந்து செல்வதைப் பார்த்தால் சரண் அடைவான் போல இருந்தது. பின்னால் ஒருவர் துரத்திக்கொண்டு ஓடினார். அப்போது செங்கல்பட்டு ரெயில் வந்தவுடன் நான் ஏறிபோய்விட்டேன் என்றார் அவர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments