Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கூட்டத்தில் அடியாட்கள் ஊடுறுவலா? – போலி அடையாள அட்டையுடன் ஆசாமிகள்!

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (11:26 IST)
இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு போலி அடையாள அட்டையுடன் சிலர் வந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை குறித்த மோதல் நிலவி வரும் நிலையில், கடும் பரபரப்புகளுக்கு இடையே இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தவிர வேறு 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடியார் அணியினர் கோஷங்களை எழுப்பி வருவதால் 23 தீர்மானங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக உறுப்பினர் அட்டையுடன் சில ஆசாமிகள் பொதுக்குழு கூட்டத்திற்குள் ஊடுறுவியதாகவும், அவை போலி அடையாள அட்டைகள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக எடப்பாடி அணியினர் ரவுடிகளை இறக்க திட்டமிடுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் அளித்திருந்த நிலையில் இந்த தகவல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

ஜம்மு காஷ்மீர் நிலவரம் எப்படி இருக்கு? அமித்ஷாவிடம் கேட்டறிந்த ராகுல் காந்தி..!

விஜய், சீமான், அன்புமணி, பிரேமல்தா கூட்டணி தான் 3வது அணியா? அதிமுக - திமுக கூட்டணிக்கு சிம்மசொப்பனம்?

அடுத்த கட்டுரையில்
Show comments