Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்சார வாரியம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்..!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (13:06 IST)
சூரிய மின்சார தயாரிப்பு ஆலையை மின்சார வாரியமே தொடங்க இருப்பதாகவும் தமிழ்நாட்டில் 6000 மெகா வாட் சூரிய மின்சாரத்தை மின்சார வாரியம் சொந்தமாக உற்பத்தி செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்தியாவில் பல மாநிலங்களில் சூரிய மின்சார தயாரிப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிந்ததே. இந்த நிலையில் திருவாரூரில் சூரிய மின் உற்பத்தி பூங்காவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் விரைவில் தொடங்கி வைப்பார் என்றும் அதில் 6000 மெகா வாட் சூரிய மின்சாரத்தை மின்சார வாரியம் சொந்தமாக உற்பத்தி செய்யும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
 சூரிய மின் உற்பத்தியில் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று முன்தினம் அதிகபட்ச உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
 
சூரிய மின்சாரத்தை மின்சார வாரியம் அதிகம் தயாரித்தால் மின்கட்டணம் குறைக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments