Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு SNJ குழுமம் ரூ.2 கோடி நிதியுதவி!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (21:06 IST)
‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை - களம் நமதே!’ எனும் பெயரில் மக்கள் தங்கள்  திறன்களை  வெளிப்படுத்தும்  வகையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
 

இந்த நிலையில், முதலமைச்சர் கோப்பை-2023 மா நில விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி  சென்னை நேரு விளையாட்டு  அரங்கில் முதல்வர் முக.ஸ்டாலினால்  தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்களின் திறமையை உலகறியச் செய்யும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த முதலமைச்சர் கோப்பை -2023 வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு SNJ குழுமம் தங்கள் பங்களிப்பாக ரூ.2 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளது.

இதுபற்றி அமைச்சர் உதய நிதி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை உள்கட்டமைப்பை உலகத்தரத்திற்கு உயர்த்தவும், நம் விளையாட்டு வீரர்களின் திறமைக்கு துணை நிற்கவும், மாண்புமிகு முதலமைச்சர்  முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு SNJ குழுமம் தங்கள் பங்களிப்பாக ரூ.2 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளது.

நம் வீரர்-வீராங்கனைகளின் திறமைகளைச் சாதனைகளாக்கும் முயற்சிக்கு வலுசேர்த்த அந்நிறுவனத்துக்கு என் அன்பும், நன்றியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments