Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் ரத்து: மின் வாரியம் அறிவிப்பு.. மாத கணக்கெடுப்பு என்ன ஆகும்?

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (09:23 IST)
ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஒவ்வொரு மாதமும் மின் கணக்கீடு என்ன ஆகும் என்ற கேள்விக்குரிய தற்போது எழுந்துள்ளது. 
 
வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடுவதில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிந்தவுடன் ஒவ்வொரு மாதமும் மின் கணக்கீடு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் ஜூன் 5ஆம் தேதி டென்டரில் பங்கேற்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீர் என ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள விளக்க பொறுப்பில் கூறியிருப்பதாவது: 
 
‘மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், தமிழகத்தில் வீடுகளுக்கு ஸ்மார்ட்மீட்டர் பொருத்த தமிழக மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் விளக்கக் கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இந்நிறுவனங்கள் தரப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அதற்கு ஏற்ப டெண்டர் விதிகளில் திருத்தம் செய்யப்பட உள்ளது. எனவே, நிறுவனங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் விவரங்கள் இடம்பெறுவதுடன், 3 தொகுப்புகளுக்கும் சேர்த்து புதிய டெண்டர் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments