Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வெள்ள பாதிப்பு.. அமைச்சர் உதயநிதியிடம் வெள்ள நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன்..!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (10:06 IST)
சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருமை வெள்ளம் காரணமாக ஏராளமான  மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலர் வெள்ள நிவாரண நிதியை தமிழக அரசுக்கு அளித்து வருகின்றனர்

நடிகர் சூர்யா முதல் நபராக ரூ.10 லட்சம் வழங்கிய நிலையில் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் வழங்கினார். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 10 லட்ச ரூபாய் அமைச்சர் உதயநிதியிடம் வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இது குறித்து உதயநிதி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் –  இயக்கங்கள் - தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நம்மை சந்தித்த போது, நடிகர் – சகோதரர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும் - நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம் - இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்! 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மசோதா நிறைவேறினால் வக்பு நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்

இன்று வக்பு வாரிய மசோதா: ராகுல் காந்தி தலைமையில் அவசர ஆலோசனை..!

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

புவிசார் குறியீடு ஏன் தரப்படுகிறது? அதனால் என்ன பயன்? தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments