Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஷ்பு எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது..!

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (08:01 IST)
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் குஷ்பு மற்றும் ஆளுநர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் குஷ்பு நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது எச்சரிக்கை விடுத்தார். அவர் எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டதோடு திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நடிகை குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதற்கு குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்தார். இப்படிப்பட்ட நபர்களை முட்டிக்கு முட்டி அடிக்க வேண்டும் என்றும் இதை நான் சும்மா விடமாட்டேன் என்றும் திமுக என்னை சீண்டி பாக்காதீர்கள் தாங்க மாட்டீர்கள் என்றும் ஆவேசமாக பேட்டி அளித்திருந்தார். 
 
குஷ்பு பேட்டி அளித்த ஒரு சில மணி நேரங்களில் சென்னை போலீசார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவின் அடிப்படை உறுப்பினர் தகுதிகள் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments