சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! – அடுத்தடுத்து பரபரப்பு!

Webdunia
புதன், 27 ஜனவரி 2021 (11:30 IST)
சீர்காழியில் நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தை கொன்ற கொள்ளையன் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே உள்ள சீர்காழியில் ரயில்ரோடு பகுதியில் வசித்து வருபவர் வடமாநிலத்தை சேர்ந்த தன்ராஜ். தனது மனைவி, மகன், மருமகளோடு ஒன்றாக வசித்து வரும் இவர் நகை அடகுக்கடை வைத்துள்ளதோடு, நகைகளை மொத்த விற்பனையும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் அவரது வீட்டிற்குள் புகுந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை தாக்கிவிட்டு உள்ளே இருந்து 16 கிலோ தங்க நகைகளையும், தன்ராஜின் காரையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் தன்ராஜின் மகன், மனைவி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார் எருக்கூர் பகுதியில் பதுங்கி இருந்த மூன்று வடமாநில கொள்ளையர்களையும் பிடித்துள்ளனர். அப்போது மூவரும் தப்பியோட முயன்ற நிலையில் போலீஸார் சுட்டதில் கொள்ளையன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். அடுத்தடுத்த நடைபெற்ற இந்த சம்பவங்கள் சீர்காழியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால், அது அவருக்கு நஷ்டம்; அவரது தொண்டர்களுக்கு கஷ்டம்: நடிகை கஸ்தூரி

ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வேன்: குடிமகன்களுக்கு குஷியான வாக்குறுதி கொடுத்த பிரசாந்த் கிஷோர்..!

ஃபுட்பால் மாதிரி மாணவனை எட்டி உதைத்த ஆசிரியர் கைது.. 8 மாதங்களுக்கு பின் வெளியான உண்மை..!

எங்கள் கட்சி வேட்பாளர்களை மத்திய அமைச்சர்கள் மிரட்டுகின்றனர். பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு..!

சிமெண்ட் கான்க்ரீட்டில் சிக்கிய குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர்! கேரளாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments