Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பிரபல இசையமைப்பாளரின் மகள் மர்ம மரணம்

பிரபல இசையமைப்பாளரின் மகள் மர்ம மரணம்

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2016 (09:58 IST)
பிரபல இசையமைப்பாளரான ஜான்சனின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான ஷான் ஜான்சன் சென்னையிலுள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.


 

 
மலையாள திரை உலகில் பிரபல இசையமைப்பாளர் ஜான்சன். அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு காலமானார்.
 
இவரது மகள் ஷான் ஜான்சன் திருமணம் ஆகி கணவரை பிரிந்து சென்னை கோடம்பாக்கம் சங்கரபாணி தெருவில் வசித்து வந்தார்.
 
ஷான் மயிலாப்பூரில் உள்ள தனியார் நிவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்து வந்தார். தமிழில் எங்கேயும் எப்போதும் மற்றும் பறவை ஆகிய படங்களில் பாடியுள்ளார்.
 
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தன்னுடைய உறவினர்களிடம் அவர் செல்போனில் பேசியுள்ளார்.
 
இதைத் தொடர்ந்து, இரவு உணவை சாப்பிட்ட பின்னர் வீட்டுக்குள் உறங்க சென்ற அவர், மாலை நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
 
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், கதவை திறந்து பார்த்தனர்.
 
அப்போது, ஷான் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடல் முழுவதும் கருப்பு நிறமாக மாறி இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், அவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இது குறித்து அசோக் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிற்சாலை பாய்லர் வெடித்து தீ விபத்து: 10 பேர் பலி.. 48 பேர் காயம்..!

மனைவியை அபகரித்து சொத்தையும் கேட்ட கட்சி தலைவர்! ஆள் வைத்து கதை முடித்த காங். பிரமுகர்!

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

Show comments