Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பியூஸ் மானுஸ்வுடன் ஏரிகளை பார்வையிட்ட சிம்பு: திட்டம் என்ன?

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (17:31 IST)
தமிழகமே கடந்த சில நாட்களாக காவிரிக்காக போராடி கொண்டிருந்த நிலையில் நடிகர் சிம்பு சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்கும் நாம், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்தோமா? என்ற கேள்வியை எழுப்பினார்.
 
மேலும் கேள்வி எழுப்புவது மட்டுமின்றி தற்போது அவர் களத்திலும் இறங்கிவிட்டார். சேலம் பகுதியில் சேலம் மக்கள் குழு' என்ற அமைப்பின் மூலம் பியூஷ் மானுஸ் என்பவர் பொதுமக்களின் உதவியுடன் மூக்கனேரி உள்பட ஒருசில ஏரிகளை தூர் வாரினார் என்பது தெரிந்ததே. குப்பையுடன் காட்சி அளித்த அந்த ஏரி தற்போது தூர்வாரப்பட்டதால் மக்களின் பயன்பாட்டுக்கு தேவையான தண்ணீரை உள்ளடக்கியுள்ளது.
 
இந்த ஏரிகளை பரிசலில் சென்று இன்று பியூஷ் மானுஸ்வுடன் பார்வையிட்ட சிம்பு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'இங்குள்ள ஏரிகள் தூர்வாரப்பட்டது குறித்து அறிந்து கொண்டேன். இதேபோல் இன்னும் தமிழகத்தில் பல ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் தூர்வாரப்பட வேண்டிய நிலையில் உள்ளது. அதுகுறித்து பியூஷ் மானுஷ் அவர்களுடன் பேசியுள்ளேன். விரைவில் இதுகுறித்த திட்டம் ஒன்றை அறிவிப்பேன். இது அரசியல் கிடையாது மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து நான் எடுக்கும் ஒரு சிறு முயற்சி' என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மரணத்திற்கு முன் போயிங் காக்பிட்டில் இருந்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி? வைரலாகும் புகைப்படங்கள்

திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம்? நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

தவெக செயற்குழு கூட்டம் தொடங்கியது.. கூட்டணி நிலைப்பாட்டை வெளியிடுவாரா விஜய்?

பாட்டு பாடி ஆட்டம் போட்ட விஜய் மல்லையா - லலித மோடி.. இந்தியாவில் கொள்ளையடித்த பணத்தில் பார்ட்டியா?

காதலியை கொன்று போர்வையில் சுற்றி பிணத்தை வீசியெறிந்த காதலன்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments