Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெருப்போடு விளையாடும் சித்தராமையா: தாமதமாக ஆவேசப்படும் வைகோ!

நெருப்போடு விளையாடும் சித்தராமையா: தாமதமாக ஆவேசப்படும் வைகோ!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (13:19 IST)
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்தது. கர்நாடக அமைப்புகள் சேர்ந்து பந்த் நடத்தியது.


 
 
தமிழக திரைப்படங்களுக்கு தடை, தமிழ் நாளிதழ்கள் எரிப்பு, தமிழக பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. தமிழ் இளைஞர் மீது தாக்குதல். தமிழர்களுக்கு எச்சரிக்கை என கர்நாடகா கொந்தளித்தது.
 
ஆனால் தமிழகத்தில் பொங்கு பொங்கு என பொங்கும் தமிழ் அரசியல் கட்சிகள் மவுனமே காத்து வந்தது. தமிழ் விவகாரங்களுக்கு குரல் குடுக்கும் பல தலைவர்கள் ஏன்  காவிரி விவகாரத்தில் குரல் கொடுக்க வில்லை என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
 
இந்நிலையில் வைகோ தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார், பெங்களூருவில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய வைகோ, பேஸ்புக்கில் தனது கருத்தை பதிவு செய்த இளைஞன் தாக்கப்பட்டதற்கு கர்நாடகா அரசு பதில் சொல்லவேண்டும்.
 
கர்நாடகா முதல்வர் சித்தராமையா நெருப்போடு விளையாடுகிறார். தமிழ் இளைஞர் மீது விழுந்த அடி ஒருமைபாட்டின் மேல் விழுந்த அடியாக கருதுகிறேன். தாக்குதல் நடத்திய கன்னட வெறியர்கள் உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என வைகோ கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெற வேண்டும்: விசிகவின் வன்னி அரசு பேட்டி

மது போதையில் டூவீலர் .. இளைஞரின் தலை துண்டித்து பலி.. சென்னையில் கோர விபத்து..!

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

ரகுபதி சட்டத்துறை அமைச்சரா; தி.மு.க., பேட்டை ரவுடியா? அண்ணாமலை

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயல் எச்சரிக்கை தளர்த்தப்பட்டதாக அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments