Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் எஸ்ஐ.! பாராட்டி வெகுமதி வழங்கிய காவல் ஆணையர் அருண்.!

Senthil Velan
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (12:31 IST)
சென்னையில் போலீஸாரை பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடியை  துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை, காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
 
சென்னை செம்மஞ்சேரி சேர்ந்தவர் ரோகித் ராஜ். இவர் மீது மூன்று கொலை வழக்கு உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மூன்று வழக்குகளில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மேலும் இவர் மீது அமைந்தகரை, டிபி சத்திரம், அசோக் நகர் ஆகிய மூன்று காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டு இருந்தன.  தலைமறைவாக இருந்த ரவுடி ரோகித் ராஜை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர். 
 
இந்நிலையில் ரவுடி ரோகித் ராஜ் டிபி சத்திரம் சிமெட்ரி பகுதியில் பதுங்கி இருப்பதாக சேத்துப்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலைச்செல்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவலர்கள் சரவணகுமார், பிரதீப் ஆகியோருடன்  அங்கு சென்ற டி.பி.சத்திரம் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி, ரோகித் ராஜை சுற்றி வளைத்தார். போலீஸாரை கண்டதும் அதிர்ச்சியடைந்த ரவுடி ரோகித் ராஜ் அங்கு கிடந்த பீர் பாட்டிலை உடைத்து போலீஸாரை சரமாரியாக தாக்க ஆரம்பித்தார். இதில் காவலர்கள் சரவணகுமார் பிரதீப் இருவரும் பலத்த காயமடைந்தனர். 
 
இதனால் ரோகித் ராஜை எச்சரிக்கும் வகையில் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி கை துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டார். ஆனாலும் ரவுடி ரோகித் ராஜ் சரணடையாமல் தப்ப முயன்றார். இதையடுத்து உதவி ஆய்வாளர் கலைச்செல்வி தற்காப்புக்காக ரவுடி ரோகித் ராஜை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலது காலில் காயம் ஏற்பட்டு அங்கேயே சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட போலீஸார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

ALSO READ: முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீதான வழக்குகள் ரத்து..!
 
மேலும் காயம் அடைந்த இரு காவலர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி தடயங்களைச் சேகரித்தனர். ரவுடியை துணிச்சலாக துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் காவல் உதவி ஆய்வாளரை சென்னை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல்..!

நாளை தான் கடைசி தினம்.. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா?

மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு.. மத்திய அரசு வெளியிட்ட நெறிமுறைகளின் விவரங்கள்..!

இன்று காலை 10 மணி வரை வெளுத்து வாங்கும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

இன்று முதல் நாடாளுமன்ற கூட்டம்.. வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments