Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்தவர் பாலியல் புகாரில் சிக்கிய ஆளுநர் சண்முகநாதன்!

ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்தவர் பாலியல் புகாரில் சிக்கிய ஆளுநர் சண்முகநாதன்!

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (14:46 IST)
மேகாலய ஆளுநராக இருந்த தமிழகத்தை சேர்ந்த வி.சண்முகநாதன் நேற்று முன்தினம் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். பாலியல் புகார்கள் அடுக்கடுக்காக குவிந்ததால்தான் அவர் ராஜினமா செய்தார் என்ற தகவல் வந்ததும் நாடே அதிர்ந்தது.


 
 
இதனையடுத்து சண்முகநாதன் மீது வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளும் வைரலாக பரவியது. சண்முகநாதன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் பாஜகவில் நீண்ட காலம் பணியாற்றிவர். இதனால் அவருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு ஆளுநர் பதவி கொடுத்தது மோடி தலைமையிலான மத்திய அரசு.
 
இந்நிலையில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து பதவியை ராஜினாமா செய்திருப்பது ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் அப்படி நடந்துகொள்ள வாய்ப்பே இல்லை என அவருக்கு நற்சான்றிதழ் அளிக்கின்றனர்.
 
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சண்முகநாதன் குறித்து கூறியபோது, கடந்த 35 வருடங்களாக என்னுடன் நட்பில் இருப்பவர். இவர் யாரையும் பாலியல்ரீதியாக துன்புறுத்த மாட்டார். இவர், தனது குழந்தைப்பருவம் முதல் ஆன்மிகத்தில் மிகவும் தீவிர ஈடுபாடு கூடியவர்.
 
கோயில்களில் பல மணி நேரங்களைச் செலவிட்டு வந்தவர். இவர், டெல்லியில் வசித்துவந்தபோது நான் அவர் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு அவர் ஒரு ஆன்மிக வாழ்க்கையை வாழ்ந்துவந்தார். கட்சித் தொண்டர்கள் மற்றும் கட்சித் தலைவர்களிடம் மட்டுமே தொடர்புகொண்டவராக இருந்தவர், என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி..!

120 மாவட்ட செயலாளர்கள் நியமனம்.. தவெக தலைவர் விஜய் அதிரடி..!

இன்றிரவும் இடி மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அதிமுக, திமுக 2 கட்சிகளுக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

காதலிக்கும் பெண்ணை முத்தமிடுவது பாலியல் துன்புறுத்தல் ஆகாது!? - நீதிமன்றம் அளித்த உத்தரவு!

அடுத்த கட்டுரையில்