Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெந்நீர் ஊற்றி 17 வயது சிறுமி கொலை : தொழிலதிபர் மனைவி கைது

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2018 (10:45 IST)
சென்னையில் வேலைக்கார சிறுமியை தொழிலதிபரின் மனைவி அடித்து கொலை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை பெசண்ட் நகரில் வசித்து வரும் தொழிலதிபர் முருகானந்தம் என்பவரின் வீட்டில் ஆந்திராவை சேர்ந்த மகாலட்சுமி(17) என்ற சிறுமி  வேலைக்காரியாக பணிபுரிந்து வந்தார். 
 
இந்நிலையில் அந்த சிறுமி உடல் நிலை சரியில்லாமல் இறந்து போய்விட்டாள் என அவரின் பெற்றோருக்கு முருகானந்தம் தகவல் கொடுத்தார். ஆனால், அவர்கள் சிறுமியின் உடலை பார்த்த போது, உடலில் ஏராளமான காயங்கள் இருந்தன. எனவே, போலீசாரிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
 
போலீசார் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து வந்த முருகானந்தனும், அவரது மனைவி சவிதாவும் கடைசியில் உண்மையை கூறிவிட்டனர். வீட்டில் உள்ள வளர்ப்பு நாயை மகாலட்சுமி அடித்ததால் கோபப்பட்ட தொழிலதிபரின் மனைவி சுஸ்மிதா மகாலட்சுமியை தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார். வேலையை விட்டு அனுப்பினால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என மகாலட்சுமி மிரட்டியதால், சுஸ்மிதா அவர் மீது கடுமையான கோபத்தில் இருந்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில், நேற்று அவரை அடித்து அவர் கொலை செய்துள்ளார். கொதிக்கும் சுடுதண்ணீர் அவர் மீது ஊற்றியதால், திடீரென ஏற்பட்ட வலிப்பின் காரணமாக மகாலட்சுமியின் உயிர் பிரிந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
 
இதையடுத்து, சுஷ்மிதாவை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments