Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்துறை மீது புகார் அளித்தவர் ஆதாரங்களை வெளியிடாதது ஏன்? செந்தில் பாலாஜி கேள்வி!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (12:31 IST)
மின்துறை மீது புகார் அளித்தவர்கள் 24 மணி நேரத்தில் ஆதாரங்களை வெளியிடாதது ஏன்? என அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

 
கடந்த சில நாட்களாக மின்சாரத்துறையில் நடந்த முறைகேடு குறித்து அண்ணாமலை டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மின்துறை மீது புகார் அளித்தவர்கள் 24 மணி நேரத்தில் ஆதாரங்களை வெளியிடாதது ஏன்? சமூக வலைத்தளங்களில் போகிற போக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வேலையில்லாதவர்கள் சுமத்த கூடாது. 
 
பொதுவெளியில் அண்ணாமலை போன்றோர் குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி சுமத்த கூடாது. அரசின் மீது அவதூறு பரப்புவதை நாங்கள் சும்மா பார்த்து கொண்டு இருக்க மாட்டோம். அரசின் மீது ஆதாரமுடன் குற்றம் சுமத்தினால் நாங்கள் விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம். மின்துறையில் அனைத்து திட்டப்பணிகளையும் வெளிப்படை தன்மையுடன் அரசு நிறைவேற்றி வருகிறது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments