தேர்தல் ஆணையத்துக்கு செந்தில் பாலாஜி எழுதிய கடிதம்: என்ன எழுதியுள்ளார்?

Webdunia
ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (17:02 IST)
கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
தமிழகத்தில் சமீபத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தற்போது மூடி சீலிடப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன 
 
மே இரண்டாம் தேதி தான் இந்த அறையில் உள்ள சீல் உடைக்கப்பட்டு அதன்பின் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன 
 
அந்த வகையில் திமுகவின் கரூர் தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கூடுதலாக பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்று உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments