Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாமீன் இல்லை.. செந்தில் பாலாஜி மனுவை திரும்பப் பெற அனுமதி: அடுத்து என்ன நடக்கும்?

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (14:37 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு குறித்த தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் வெளியான நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மருத்துவ காரணங்கள் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து செந்தில் பாலாஜி இன்னும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் மெரிட் அடிப்படையில் மட்டுமே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பரிசினை செய்ய வேண்டும் என்றும் அவசர மனுவாக பரிசீலனை செய்ய வேண்டாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு  ஜாமீன் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments