Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தை வெளியே தள்ளுங்கள்.. திருவான்மியூர் பூத்தில் கோபப்பட்ட சீனியர் சிட்டிசன்..!

Siva
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (08:50 IST)
சீனியர் சிட்டிசன் நான் வெளியே காத்திருக்கும் நிலையில் அஜித்தை மட்டும் எதற்காக முன்கூட்டியே உள்ளே ஓட்டு போட அனுமதித்தீர்கள் என முதியவர் ஒருவர் காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் அஜித் முதல் நபராக காலை 7 மணிக்கு முன்பே வரிசையில் இன்று வாக்களித்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் அஜித்தை வாக்களிக்க காவல்துறையினர் அனுமதித்து உள்ளே அனுப்பிய போது சீனியர் சிட்டிசன் ஒருவர் காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நான் சீனியர் சிட்டிசன், எனக்கு முன்னுரிமை கொடுக்காமல், அஜித்தை ஏன் உள்ளே அனுப்புகிறீர்கள், என்னை உள்ளே அனுப்புங்கள் என்று அந்த சீனியர் சிட்டிசன் வாக்குவாதம் செய்த நிலையில் சில நிமிடங்கள் கழித்து, அஜித் வாக்களித்து வந்தவுடன் உங்களை அனுப்புகிறேன் என்று காவல்துறை அதிகாரி சமாதானம் செய்தார்.

இருப்பினும் அந்த முதியவர் காவல்துறை அதிகாரியிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதை எடுத்து ஒரு கட்டத்தில் அந்த முதியவர் அஜித்தை வெளியே அனுப்புங்கள், என்னை வாக்களிக்க உள்ளே அனுப்புங்கள், என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ: துபாய் மழையில் சிக்கி கொண்டாரா நடிகர் விஜய்? வாக்களிக்க வருவாரா?

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் பிக்பாக்கெட்.. பணத்தை இழந்த திமுக நிர்வாகிகள்..!

எங்கும் கொலை; எதிலும் கொலை: நெல்லை நீதிமன்ற கொலை குறித்து ஈபிஎஸ் அறிக்கை..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யார்? திமுக, அதிமுக தீவிர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments