Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கொறடாவாக செம்மலை நியமனம்: சபாநாயகருக்கு மதுசூதனன் கடிதம்!

அதிமுக கொறடாவாக செம்மலை நியமனம்: சபாநாயகருக்கு மதுசூதனன் கடிதம்!

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2017 (11:07 IST)
அதிமுகவின் புதிய கொறடாவாக செம்மலை நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியில் சசிகலாவால் நீக்கப்பட்டதாக கூறப்படும் அவைத் தலைவர் மதுசூதனன் அதிரடியாக அறிவித்துள்ளார்.


 
 
அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணியாக இரண்டாக பிளவுபட்டதை அடுத்து மாற்றி மாற்றி எதிரணியை கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர். இதில் யாருடைய உத்தரவு செல்லும் என்பதே குழப்பமாக உள்ளது.
 
இந்நிலையில் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இந்த வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சமிக்கு வாக்களிக்க வேண்டும் என அந்த கட்சியின் கொறடா அரியலூர் ராஜேந்திரன் கூறினார்.
 
ஆனால் அவர் முந்தைய ஓபிஎஸ் அரசால் நியமிக்கப்பட்டவர் அவரது உத்தரவு செல்லாது என ஓபிஎஸ் அணி கூறியுள்ளது. இதனால் கொறடா உத்தரவை மீறினால் தங்களை பதவிநீக்கம் செய்ய முடியாது என கூறியுள்ளனர்.
 
இந்நிலையில் அதிமுக கொறடாவாக செம்மலையை அதிரடியாக நியமித்துள்ளார் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன். இதை சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் மதுசூதனன். இது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments