Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செமஸ்டர் தேர்வு நடைபெறும் தேதி குறித்து உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (16:20 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
தமிழ்நாட்டில்‌ கொரோனா வைரஸின்‌ தாக்குதலை சமாளிக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில்‌ ஒன்றாக அனைத்துக்‌ கல்லூரிகளுக்கும்‌ 17.03.2020 முதல்‌ விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்‌ விளைவாக மாணவர்களுக்கான செமஸ்டர்‌ தேர்வுகள்‌ இன்னும்‌ நடத்தப்படவில்லை. கல்லூரி மாணவர்கள்‌ தமிழ்நாட்டைத்‌ தவிர வேறு மாநிலங்களிலிருந்தும்‌ அயல்‌ நாட்டிலிருந்தும்‌ வந்து இங்கு கல்வி பயில்கின்றனர்‌. இதனை கருத்தில்‌ கொண்டு அனைத்து செமஸ்டர்‌ தேர்வுகளும்‌ மீண்டும்‌ கல்லூரிகள்‌ துவங்கும்‌ அடுத்த பருவம்‌ செமஸ்டரின்‌ துவக்கத்தில்‌ தேர்வுகள்‌ நடத்தப்படும்‌. கல்லூரி மற்றும்‌ பல்கலைக்கழகங்கள்‌ மீண்டும்‌ திறப்பதற்கான தேதி அரசால்‌ பின்னர்‌ அறிவிக்கப்படும்‌.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தியது ஏன்? கைதான மதன்குமார் வாக்குமூலம்..!

நெருப்பில்லாமல் புகையாது: அதானி-தமிழக அரசு ஒப்பந்தம் குறித்து பிரேமலதா..!

அடுத்த கட்டுரையில்
Show comments