Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரோல் செய்தவர்களுக்கு நன்றி.. புலிவால் புகைப்படத்திற்கு செல்லூர் ராஜூ கமெண்ட்..!

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (18:49 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் புலிவாலை பிடித்த புகைப்படத்தை முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு வெளியிட்டிருந்த நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் ட்ரோல் செய்தனர். இதனை அடுத்து தற்போது அவர் ட்ரோல் செய்தவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். 
 
உங்கள் கருத்துக்கு நன்றி. இது உண்மையில் என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றாலும் நீங்கள் இப்போது புத்துணர்ச்சியாக உணர்கிறீர்கள் என்று நம்புகிறேன். இந்த ஈடுபாட்டை உங்களை சுற்றி உள்ள சமூக பிரச்சனைகளையும் காட்டினால் நாடும் வீடும் நலம் பெறும் என்று தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் வெளிநாடு சுற்றுலா சென்ற முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு புலிவாலை பிடித்த புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் என்பதும் அந்த புகைப்படம் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

2023ஆம் ஆண்டுக்கு பின் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments