Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாவை இழிவாக பேசியபோது திமுக கொந்தளிக்காதது ஏன்? செல்லூர் ராஜூ கேள்வி..!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (09:12 IST)
பேரறிஞர் அண்ணாவை குறித்து இழிவாக பேசிய அண்ணாமலையை திமுக கண்டிக்காதது ஏன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
 
சமீபத்தில் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில் அதிமுகவில் உள்ள தலைவர்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனார். குறிப்பாக ஜெயக்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்தார் 
 
ஆனால் திமுக தரப்பில் ஆர் எஸ் பாரதி மட்டுமே கண்டனம் தெரிவித்திருந்தார். திமுகவின் முக்கிய தலைவர்கள் அமைதியாக இருந்தது ஏன் திமுக இந்த விஷயத்தில் கொதித்து எழுந்திருக்க வேண்டாமா என்று  மதுரையில் நடந்த அதிமுக கூட்டத்தில் அமைச்சர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார். 
 
அண்ணாமலையை கண்டித்து பேசினால் ரெய்டு வந்து விடுமோ என்ற பயம் காரணமாக தான் திமுக எதுவும் பேசவில்லை என்றும் அண்ணாவைப் பற்றி ஒருவர் இழிவாக பேசிய போது கூட்டணியில் இருந்த நாங்களே குரல் கொடுத்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. உடலை தானமாக வழங்க கடிதம்..!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.. கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை எலும்பு முறிவு..!

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு முற்றுகைப் போராட்டமா? விந்தையிலும் விந்தை: தவெக அறிக்கை..!

ஜூன் மாத சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments