Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பின்புற வாசல் வழியாக விற்பனை...கடைகளுக்கு 1 லட்சம் அபராதம்

Webdunia
சனி, 8 மே 2021 (00:14 IST)
கரூரில் அரசின் உத்தரவையும் மீறி பின்புற வாசல் வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்து விற்பனையில் ஈடுபட்ட 2 கடைகளுக்கு 1 லட்சம் அபராதம் விதித்த நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள்.
 
கரூர் நகரில் ஜவஹர் பஜார் பகுதியில் பிரபல துணி கடைகளில் பின்பக்க வாசல் வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்து விற்பனை நடைபெறுவதாக நகராட்சி நல அதிகாரி (பொ) அதிகாரி பழனிச்சாமி மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து நகர் நல அலுவலர் (பொ) பழனிச்சாமி மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஜவஹர் பஜார் பகுதியில் முன்பக்க கதவுகளை பூட்டியிருந்த கடைகளின் பின்பக்க கதவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நியூ கே.பி.எம் மற்றும் கே.பி.எம் வேலன் சில்க்ஸ் துணிகடைகளின் பின்புற கதவு வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கடை உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்த நகர்நல அதிகாரிகள் வாடிக்கையாளர்களையும், விற்பனையாளர்களையும் வெளியேற்றி நகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டினர். மேலும்,  இரண்டு கடைகளுக்கும் தலா 50 ஆயிரம் அபராதம் வித்தித்தனர். கொரோனா 2வது அலை மிக தீவிரமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் இது போன்று விற்பனையில் ஈடுபடும் கடைகாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர். மேலும், இதே போன்று நேற்று மட்டும் சுமார் 15 கடைகளுக்கு சீல் வைத்த்து குறிப்பிடத்தக்கது. கரூர் நகராட்சி நகர்நல அதிகாரி பழனிச்சாமி, தெரிவிக்கையில், கொரோனா இரண்டாம் அலை ஆங்காங்கே கோர தாண்டவம் ஆடும் நிலையில், பொதுமக்களுடன் இணைந்து கடை உரிமையாளர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவிலிருந்து மக்கள் தப்பிக்க முடியும் ஆகவே விழிப்புணர்வு இன்னும் தேவை என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! - கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த மக்கள்

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments