டாஸ்மாக் கூட்டத்தைக் கட்டுபடுத்தலாம்… ஆனால் கோயில்களில் முடியாது – அமைச்சர் சேகர் பாபு!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (12:33 IST)
கொரோனா தொற்று முழுவதுமாக குறைந்த பின்னரே கோயில்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பல்வேறு துறைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக இந்து அறநிலையத்துறையிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவில் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவு செய்தல், அனைவருக்கும் அர்ச்சகர் பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மூடப்பட்ட கோயில்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இது சம்மந்தமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கோயில்களை ஏன் திறக்கக்கூடாது எனக் கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதிலளித்துள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ‘டாஸ்மாக் கடைகள் பொதுவெளியில் இருப்பதால் போலீஸார் மக்களைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் கோயில்களைத் திறந்தால் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்குத் தொடர் கனமழை! வானிலை எச்சரிக்கை..!

350% வரி விதிப்பேன் என மிரட்டினேன்.. உடனே மோடி போரை நிறுத்திவிட்டார்: டிரம்ப்

வேண்டுமென்றே குறைபாடுகளுடன் அறிக்கை சமர்ப்பித்தது தமிழக அரசு.. கோவை, மதுரை மெட்ரோ குறித்து அண்ணாமலை..!

தையல் போடுவற்கு பதில் 5 ரூபாய் பெவிக்யிக்கை ஒட்டிய டாக்டர்.. சிறுவனின் உயிரில் விளையாடுவதா?

ஏடிஎம்-இல் பணம் நிரப்பும் நிறுவனத்தின் வாகனம் கொள்ளை.. ரூ.7 கோடி பணம் என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments