Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா குடும்பத்தினர் கொலைகாரர்கள் என்றால் அமைச்சர்கள் புனிதர்களா?: சீறும் சீமான்!

சசிகலா குடும்பத்தினர் கொலைகாரர்கள் என்றால் அமைச்சர்கள் புனிதர்களா?: சீறும் சீமான்!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (19:45 IST)
சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா விவகாரத்தில் கொலைகாரர்கள் போல சித்தரிக்கும் அமைச்சர்கள் புனிதர்களா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


 
 
ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அவரை நாங்கள் சந்தித்தோம், அவர் இட்லி சாப்பிட்டார். நல்ல உடல் நலத்துடன் இருந்தார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார் என அமைச்சர்கள் இதுவரை தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது சசிகலா குடும்பத்தை அமைச்சர்கள் எதிர்ப்பதால், நாங்கள் அப்போது பொய் கூறினோம் சசிகலா குடும்பதம் தான் எல்லாத்துக்கும் காரணம் என கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் சென்னையில் செய்தியாளா்களை சந்தித்த சீமான் ஜெயலலிதா மரணம் தொடா்பாக அமைச்சா்கள் மாறி மாறி பேசுவதில் இருந்து அவரது மரணத்தில் ஏதோ நடந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி அரசு சொல்வதையே கேட்டு செயல்படுவார் என தெரிவித்தார். ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார் என கூறிய நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு வர காரணம் என்ன?.
 
சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என பாஜக உத்தரவிட்டுள்ளதாலேயே சசிகலா குடும்பத்தினரை கொலைகாரர்களாக சித்தரிக்கின்றனா். சசிகலா குடும்பத்தினா் கொலைகாரா்கள் என்றால் அமைச்சா்கள் அனைவரும் புனிதா்களா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments