Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் அரசியல் பேச வேண்டும்: நாம் தமிழர் சீமான் பேட்டி..!

Webdunia
ஞாயிறு, 9 ஜூலை 2023 (13:32 IST)
ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
 
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் கூறியபோது, ‘திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசலாம் என்று தெரிவித்தார். 
 
மேலும் மீனவர்கள் கைது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும் என்றும், அண்ணாமலை பேச வேண்டியதெல்லம் ஆளுநர் பேசி விடுவதால் அண்ணாமலைக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் என்று கூறினார். 
 
மேலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ய நீங்கள் யார்? என கேள்வி எழுப்பிய சீமான், ‘"ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது மக்களாட்சிக்கு விரோதமானது என்று கூறினார்.
 
விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம் என்றும், இதற்கு முன்பாக, மது குடிக்கும் காட்சிகளில் விஜய் நடித்தது இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினார்,.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments