பாஜக எனக்கு 500 கோடி ரூபாய் தருவதாக சொன்னார்கள்: சீமான் அதிர்ச்சி தகவல்..!

Mahendran
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (09:53 IST)
பாஜக கூட்டணியில்  இணைந்தால் எனக்கு 500 கோடி ரூபாய் தருவதாக சொன்னார்கள் என்றும் மேலும் 10 தொகுதிகள் தருவதாக ஆசை வார்த்தை காட்டினார்கள் என்றும் ஆனால் நான் அவர்களுடன் கூட்டணி சேரவில்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாம் தமிழர் கட்சியை தங்கள் கூட்டணியில் இணைக்க அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் நாம் சீமான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று தான் செய்திகள் வெளியானது. ஆனால் திடீரென சீமான் தன்னை பாஜக கூட்டணிக்கு அழைத்ததாகவும் எவ்வளவோ என்னிடம் ஆசை வார்த்தைகளை கூறியிருந்தார்கள் என்றும் பாஜகவுடன் சேர்ந்தால் 500 கோடி ரூபாய் மற்றும் பத்து சீட்டுகள் தருவதாக கூறினார்கள் என்றும் தேர்தல் பிரச்சார மேடையில் தெரிவித்துள்ளார்

நான் பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் அந்த ஆத்திரத்தில் தான் நான் கேட்ட சின்னம் எனக்கு கிடைக்கவில்லை என்றும் பாஜக கட்சி அலுவலகமாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்றும் தேனியில் நடந்த பரப்புரை கூட்டத்தில் சீமான் ஆவேசமாக பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் 500 கோடி ரூபாய் கொடுத்து சீமானை கூப்பிடும் அளவுக்கு அவர் வொர்த் இல்லை என்று நெட்டிசன்கள் சீமானின் இந்த கருத்துக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments