Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா மறைமுகமாக செய்வதை விஜய் வெளிப்படையாக செய்கிறார்: சீமான்

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (15:15 IST)
நடிகர் சூர்யா மறைமுகமாக மாணவ மாணவிகளின் கல்விக்கு உதவி செய்து வரும் நிலையில் நடிகர் விஜய் வெளிப்படையாக அந்த உதவியை செய்கிறார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் விஜய் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இது குறித்து சீமான் கருத்து கூறிய போது ’நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலமாக பல ஆண்டுகளாக மறைமுகமாக செய்து வரும் சேவையை தான் விஜய் தற்போது வெளிப்படையாக செய்து வருகிறார். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர விரும்புவதால் இவ்வாறு செய்கிறார்
 
ஆனால் அதே நேரத்தில் மாணவர்களை ஊக்கப்படுத்துவதை வரவேற்கலாம் பாராட்டலாம் மேலும் வாக்கு செலுத்துவதற்கு பணம் கொடுக்கக் கூடாது என தம்பி விஜய் பேசியதும் வரவேற்பு தக்கது என்று கூறினார். 
 
தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை வாழ்த்துகிறேன், ஆனால் என்னுடைய பாதை வேறு, அவருடைய பாதை வேறு, விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அவ்வாறு நினைப்பவரை தள்ளிவிடக்கூடாது, தட்டிக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெறும் 4 டாலர்தானா? சுனிதா வில்லியம்ஸுக்கு இவ்வளவுதான் சம்பளமா?

சற்று குறைந்தது தங்கம் விலை.. ஆனாலும் ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்தை நெருங்கி வருவதால் அதிர்ச்சி..!

தீர்மானம் தோல்வி! சபாநாயகராக தொடர்கிறார் அப்பாவு! - அதிமுக - திமுக காரச்சார விவாதம்!

டாஸ்மாக் ஊழல்: போராட்டம் நடத்த சென்ற அண்ணாமலை கைது! - சென்னையில் பரபரப்பு!

சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: ஈபிஎஸ்க்கு ஓபிஎஸ் ஆதரவு

அடுத்த கட்டுரையில்
Show comments