Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக - அதிமுக உருப்பட என்ன செய்யனும்? சீமான் ஃப்ரீ அட்வைஸ்!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (09:36 IST)
சீமான் தனது சமீபத்திய பேட்டியில், திமுக மற்றும் அதிமுகவின் எதிர்காலம் குறித்து பேசியுள்ளார்.
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் வேகமாக தயாராகி வருகின்றன. கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளையும் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலில் ஒரு தொகுதியில் இரண்டு வெவ்வேறு கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் நின்றால் அது பெரும்பாலும் கவனம் ஈர்க்கும். முந்தைய தேர்தல்களை விட இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு செல்வாக்கு சற்று கூடியுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமீபத்திய பேட்டியில், திமுக மற்றும் அதிமுகவின் எதிர்காலம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது,
 
தமிழகத்தில் உள்ள இருபெரு கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு எதிர்காலம் வேண்டுமென்றால் திமுக காங்கிரஸையும், அதிமுக பாஜகவையும் கழற்றி விட வேண்டும். அதேசமயம் தமிழகத்திற்கும் தமிழகர்களுக்கும் எதிர்காலம் வேண்டும் என்றால் மக்கள் திமுக மற்றும் அதிமுவை கைவிட வேண்டும் என பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

கோவை வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் உயிரிழப்பு.. உடன் வந்த நண்பர்கள் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments