Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்தை எதிர்க்கட்சி தலைவர் என்று ஏற்க முடியாது - சீமான்

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (17:34 IST)
விஜயகாந்தை எதிர்க்கட்சி தலைவர் என்று ஏற்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
 
கங்கைகொண்டான் சிப்காட்டில் செயல்பட்டு வரும் தனியார் குளிர்பான நிறுவனத்தை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாளை மார்க்கெட் திடலில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
 
நெல்லை மாவட்டத்தில் உள்ள வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளை மூடும் வரை நாங்கள் போராடுவோம் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானால் மகிழ்ச்சி அடைவேன். விஜயகாந்தை எதிர்க்கட்சி தலைவர் என்று ஏற்க முடியாது. செய்தியாளர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியாதவர் எப்படி எதிர்க்கட்சி தலைவராக முடியும். 20 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்த எதிர்கட்சி தலைவர் ஏன் அனைத்து கட்சியினருடன் பிரதமரை சந்திக்கவில்லை என்று கூறினார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments