Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த கட்சியில் எவன் இருப்பான்..? திமுக தொண்டர்களை படு கேவலமாக பேசிய சீமான்

Webdunia
வெள்ளி, 10 மே 2019 (14:59 IST)
சீமான் பிரச்சாரத்தின் போது திமுகவையும் திமுக தலைவர் ஸ்டாலினையும், அக்கட்சியில் இருக்கும் தொண்டர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.  
 
வரும் 19 ஆம் தேதி திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.  
 
சமீபத்தில், சூலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் விஜய ராகவன் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது அவர் திமுகவில் யார் இருப்பார்கள் தெரியுமா என அக்கட்சி தொண்டர்கள் படு மோசமாக விமரித்துள்ளார். அவர் பேசியதாவது... 
கருணாநிதியின் மகன் என்பதை தாண்டி ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கு? கருணாநிதிக்கே தகுதி இல்லைன்னு சொல்றேன்.. இதுல மகனுக்கு என்ன தகுதி இருக்கு? ஸ்டாலின் என்ன ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலினா? என்ன பிழைப்புக்காக நக்கி பிழைக்கிற கூட்டம் இல்லை நாங்கள். என் இன மக்களை பிழைக்க வைக்கிற புரட்சியாளர் கூட்டம் என பேசினார்.
 
அதோடு அந்த கட்சியில் சூடு, சொரணை இல்லாதவர், சோத்துல உப்பு போட்டு திண்ணாதவர், நல்ல தண்ணி குடிக்காதவர்.. இப்படித்தான் அங்க இருப்பாங்க என விமர்சித்துள்ளார். சீமானின் இந்த பேச்சு கடும் திமுகவினரின் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments