Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டார் ஓட்டலில் ரூம் கேட்ட சீமான்!? – ட்ரெண்டாகும் #சீமான்ணேரூம்போட்டியா

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (10:19 IST)
தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நட்சத்திர விடுதியில் ரூம் கேட்டதாக அவரது கட்சி தொண்டர் ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில் தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

இதுகுறித்து சமீபத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சீமான் பிரச்சாரத்திற்கு வந்தபோது அவருக்கு வசதியான வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தந்ததாகவும், ஆனால் அதில் தங்க முடியாது என சீமான சொன்னதாகவும், பிறகு அறை எடுத்த சொகுசு விடுதியிலும் ஜிம் இல்லை என நிராகரித்துவிட்டு பிரபல நட்சத்திர ஓட்டலில் ரூம் போட சொன்னதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை தொடர்ந்து நெட்டிசன்கள் சீமானை கிண்டல் செய்து பல மீம்களை பகிர்ந்து வருவதுடன் #சீமான்ணேரூம்போட்டியா என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments