Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னத்தில் தான் விவசாயியா..? நான் நிஜத்திலேயே விவசாயிதான்: சீமான் ஆவேசம்

Mahendran
புதன், 27 மார்ச் 2024 (13:51 IST)
சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் அவருக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது கட்சியின் சின்னத்தை அறிமுகம் செய்த சீமான் ஆவேசமாக பேசியதாவது:

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீமானுக்கு தான் ஓட்டு, சின்னத்துக்கு இல்லை. கரும்பு விவசாயி சின்னத்துக்காக கடைசி வரை போராடினோம். சின்னத்தில் தான் விவசாயியா..? நான் நிஜத்திலேயே விவசாயிதான்.

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் எங்களுக்குக் கிடைத்திருக்கும். ஆனால் என் வாழ்நாளில் சமரசத்துக்கு இடமில்லை. நாளை முதல் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளோம். நாம் தமிழர் மைக் சின்னத்தில் போட்டியிடும்!

பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பவர்களுக்கு சைக்கிள் சின்னம், குக்கர் சின்னம் கிடைத்தது போல் நானும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் கரும்பு விவசாயி சின்னம் கிடைத்திருக்கும். தேர்தல் ஆணையம் சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் சுதந்திரமாக இயங்குவதில்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது என சீமான் ஆவேசமாக கூறினார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

தவெக கொடியில் உள்ள யானை சின்னத்துக்கு தடையா? தீர்ப்பு தேதி அறிவிப்பு..!

ஸ்விக்கியில் பிரியாணி, நூடுல்ஸ், பீட்சா, பர்கர்கள்.. ரூ.99 விலையில் உணவு வழங்கும் புதிய சேவை அறிமுகம்!

அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதா? சரமாரி கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments